“எளிமையின் உச்சம்…” அபுதாபி இளவரசர் ஷேக் காலித்தின் செயலால் இணையத்தில் குவியும் பாராட்டுகள்… நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

By Devi Ramu on புரட்டாதி 14, 2026

Spread the love

புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், மாநாடு நிறைவுபெற்றுத் தாய்நாடு திரும்பியபோது வெளிப்படுத்திய எளிய செயல் இணையத்தில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

மாநாடு முடிந்து விமான நிலையம் வந்தடைந்த இளவரசர், அதிகாரிகளிடம் விடைபெற்று விமானத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரெனத் திரும்பி வந்து, தமக்கு இத்தனை நாட்களாக காரை இயக்கிய இந்திய ஓட்டுநரை நேரில் சந்தித்து அவருக்குக் கை கொடுத்துத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

   

இந்த எளிய மற்றும் மரியாதைக்குரிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “தலைமைப் பண்புக்கும் மனிதநேயத்திற்கும் மிகச்சிறந்த சான்று இது” என நெட்டிசன்கள் பலரும் இளவரசரைப் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் தங்கியிருந்த நாட்களில் கிடைத்த சிறப்பான விருந்தோம்பலுக்கு இளவரசர் ஷேக் காலித் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.