தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்திலிருந்து ரிலீசான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த் நடித்திருப்பதைப் போல ஒரு காட்சியை உருவாக்கி இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
![]()
தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் அரசியல் கட்சி கழகம் போட்டியிடவுள்ளது. விஜயின் 69-ஆவது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகை ரம்பாவும் அவரது குடும்பத்தினரும் நடிகர் விஜயை சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பான போட்டோஸை ரம்பா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. தளபதி விஜய் அணிந்திருக்கும் ஷர்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது எக்ஸ்பிரஸ் பிராண்ட் ஷர்ட்டை விஜய் அணிந்துள்ளார். அதன் விலை 5,012 ரூபாய் ஆகும்.

