மெகா ஜாக்பாட்….! தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைவு… வெள்ளி விலை எவ்ளோ தெரியுமா…? ஹேப்பி நியூஸ்…!!

By Devi Ramu on ஐப்பசி 31, 2026

Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 அதிரடியாகக் குறைந்து பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 வரை சரிந்து நகைப் பிரியர்களுக்கு பேரானந்தத்தை அளித்துள்ளது.

சர்வதேச நிதிச் சந்தையில் நிலவி வரும் மாற்றங்கள் மற்றும் வீழ்ச்சியின் நேரடி எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. அந்த வகையில், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

   

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-ஆகவும், 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.310 குறைந்து ரூ.12,730-ஆகவும் குறைந்துள்ள நிலையில், அதே வேகத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது பண்டிகைக் காலத்தில் நகை வாங்கக் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.