வெள்ளி பிரியர்களுக்கு ஹப்பி நியூஸ்.. விலை தடாலடியாக ரூ.60,000 குறைந்தது.. ஷாக்கில் இல்லத்தரசிகள்..!!

By Muthu Mani on ஆனி 13, 2026

Spread the love

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாகவே தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. தொழில்துறை மற்றும் மின்னணுப் பொருட்களின் உற்பத்தித் துறையில் வெள்ளியின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளதாலும், சர்வதேசப் பொருளாதாரக் காரணிகளாலும் இந்தியச் சந்தையில் வெள்ளியின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து சரிவைக் கண்டு வந்த வெள்ளியின் விலை, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

உள்நாட்டுச் சந்தையில் கடந்த இரண்டு நாள்களாக இந்த விலை உயர்வு காணப்பட்டாலும், சர்வதேச சந்தையில் வெள்ளியின் மதிப்பு இன்று அவுன்ஸிற்கு ஒரு டாலர் குறைந்து $68 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெள்ளி விலை கிலோவுக்கு அதிரடியாக ரூ.60,000 வரை சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் தற்காலிகமாக விலை சற்று உயர்ந்திருந்தாலும், சர்வதேச சந்தையின் நிலவரத்தைக் கொண்டு பார்க்கும்போது வரும் நாள்களில் வெள்ளியின் விலை மேலும் குறைவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.