2020 தேர்தலில் நடந்த மிகப்பெரிய தில்லுமுல்லு?… சீனாவுக்கு சொம்பு தூக்கிய உளவுத்துறை?… 22 கோடி பேரோட டேட்டா அவுட்… சீனா மீது ட்ரம்ப் போட்ட திடீர் அணுகுண்டு…!

By Visaka on ஆடி 17, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா சட்டவிரோதமாகத் தலையிட்டிருப்பதாகக் கூறி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சில ரகசிய உளவுத்துறை ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஆற்றிய 25 நிமிட உரையில், சுமார் 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய ரகசியக் கோப்புகளைச் சீனா திருடியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தின் தீவிரத்தை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சிலர் திட்டமிட்டு மறைத்துவிட்டதாகவும், இதனால் இனிவரும் தேர்தல்களில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடியுரிமைச் சான்றுகளைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், அதிபர் ட்ரம்பின் இந்த அதிரடிப் புகார்கள் அமெரிக்க உளவுத்துறையின் முந்தைய அதிகாரப்பூர்வ அறிக்கைகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு அல்லது தேர்தல் முடிவுகள் என எந்தவொரு தொழில்நுட்ப அம்சத்திலும் வெளிநாட்டுச் சக்திகள் தலையிடவில்லை என்று சிஐஏ தரப்பில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில் ட்ரம்ப் இந்த ஆவணங்களை வெளியிட்டிருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்தக் குற்றச்சாட்டுகளைச் சீனத் தூதரகம் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக மறுத்துள்ளனர். அமெரிக்கத் தேர்தல்களில் சீனா ஒருபோதும் தலையிட்டதில்லை என்றும், இனியும் தலையிடாது என்றும் வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் லியு சாங் தெரிவித்துள்ளார். அதேபோல, ஜனநாயகக் கட்சியின் மூத்த செனட்டர் மார்க் வார்னர், ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் போலியானவை என்றும், 2020 தேர்தலில் சீனா ஒரு வாக்கைக்கூட மாற்ற முயற்சிக்கவில்லை என்பதில் அமெரிக்க உளவு அமைப்புகள் அனைத்தும் ஒருமனதாக உறுதியாக உள்ளன என்றும் சாடியுள்ளார்.