தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் திரைப்படம் ரிலீஸ் தொடர்பான சிக்கல்களில் இருந்தபோதே, விஜய்யின் தீவிர ரசிகர்கள் ஒரு சுவாரசியமான கருத்தை முன்வைத்து வந்தனர். அதாவது, தேர்தல் முடிவுகளுக்கு முன்பே இப்படம் வெளியானால் ‘தளபதி விஜய் நடிக்கும்’ என்று திரையில் பெயர் இடம்பெறும் என்றும், தேர்தல் முடிந்து அவர் வெற்றி பெற்ற பின் வெளியானால் ‘தமிழக முதல்வர் விஜய் நடிக்கும்’ என பெயர் மாற்றப்படும் என்றும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
தற்போதைய தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தவெக 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதும், குறிப்பாக கொளத்தூர் போன்ற முக்கியத் தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையில் இருப்பதும் ரசிகர்களின் அந்த கணிப்பை நிஜமாக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், விரைவில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்போது, அவர்கள் எதிர்பார்த்தபடியே ‘தமிழக முதல்வர் விஜய்’ என்ற பெயருடன் திரையில் தோன்றுவார் என சமூக வலைதளங்களில் வைரலாகக் கூறி கொண்டாடி வருகின்றனர்.
