15 கோடி வழக்கு.. தலைமறைவாக இருந்த பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்.. வெளியான திடுக்கிடும் தகவல்..

By Ranjith Kumar

Published on:

தமிழ் சினிமாவில் “பவர் ஸ்டார்” ஆக வளம் வந்து கொண்டு இருப்பவர் தான் தான் “ஸ்ரீனிவாசன்”. இவர் மருத்துவம் படித்த டாக்டராக இருந்தவர் 2010 ஆம் ஆண்டு சினிமா துறையின் மேல் ஆர்வம் கொண்டு படங்களை தயாரிப்பதற்காக முன் வந்தார். இவர் தயாரித்த சில படங்கள் சரியாக போகாமல் இருந்தது, அதன் பின் இவர் நடிப்பதில் ஆர்வம் இருப்பதை கண்டறிந்து சில நண்பர்களின் உந்துதல் மூலமாக தமிழ்த்துறை உலகில் நடிகராக அறிமுகமானார்.

அதில் நீதானே, அவன் மண்டபம், உனக்காக ஆன ஒரு கவிதை போன்ற படங்கள் மூலம் நடித்து தமிழ் சினிமா துறையில் நடிகராக தெரிய வந்தார். ஆனால் இப்படம் சரியாக இவருக்கு கை கொடுக்காமல் இருந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு கே.எஸ் மணிகண்டன் அவர்கள் இயக்கத்தில் காமெடி டிராமா மற்றும் காதல் கலவையில் சந்தானம் அவர்களுடன் இணைந்து நடித்து வெளிவந்த படம் தான் “கண்ணா லட்டு திங்க ஆசையா”. இப்படம் மூலம் தான் தமிழ் சினிமா துறையில் “பவர் ஸ்டார்” என்னும் பெயரில் மிகப் பிரபலமாக கொடிகட்டி பறந்தார். அதன் பின்னதாக இவருக்கு பல படங்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தது. தமிழ் திரை உலகில் மாபெரும் பிரபலமாக மாறினார் இவர்

   

இந்த வளர்ச்சியின் பின்னதாக மருத்துவத்துறையை தாண்டி நடிகர், தயாரிப்பாளர், காமெடியன், அரசியல்வாதி, பாடகர் போன்ற பல துறையில் கலக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். சில தினங்களுக்கு முன்னால் பல கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கில் சிக்கி உள்ளார் என்று தகவல் வெளியாக இருந்தது. தற்போது அந்த வழக்கில் தகவல்கள் கசிந்து உள்ளது. அதாவது, இறால் பண்ணை வைத்து நடத்தும் நபரிடம் 15 கோடி ரூபாய் கடனாக வாங்கி தாரேன் என்று பவர் ஸ்டார் எனும் ஸ்ரீனிவாசன் அவர்கள் ஏமாற்றியுள்ளார்.

தற்போது அந்த வழக்கு தீவிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், இதனால் சீனிவாசன் அவர்கள் தலைமறைவாக இருந்த வந்த நிலையில், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இவரைப் பிடிப்பதற்காக பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தார்கள். பவர் ஸ்டார் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இதற்கு மேல் அவர் தப்பித்து செல்ல வழி இல்லாமல், நீதிமன்றத்தில் வந்து ஆஜராகி உள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. தற்போது இந்த நிகழ்வு நடந்துள்ளதால் இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தெரிந்த ரசிகர்கள் மிக அதிர்ச்சியில் உள்ளார்கள்.

author avatar
Ranjith Kumar