உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், பொழுதுபோக்கிற்காகத் தனது வீட்டு பால்கனியில் ஒரு புகைப்படம் எடுத்தார். பின்னர், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்தப் புகைப் படத்தில் ஒரு சிறுத்தை இருப்பது போல எடிட் செய்து, “இன்று என் பகுதியில் சிறுத்தையைப் பார்த்தேன்” என்ற தலைப்புடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வேடிக்கையானப் பதிவு சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
விளைவாக, சிறுத்தை பயத்தால் அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சினர்; குழந்தைகளும் பள்ளிக்குச் செல்வது நின்றது. தகவலறிந்து வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில், அது AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படம் என்பது அம்பலமானது. விளையாட்டுக்காகச் செய்தப் பதிவு பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியதால், காவல்துறை அந்த வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. பொழுதுபோக்கிற்காகச் செய்த ஒரு சின்னத் தவறு, அந்த வாலிபரை கம்பி எண்ண வைத்துப் பெரும் விலையைக் கொடுக்க வைத்துள்ளது.
