ஆந்திர மாநிலத்தில் டிராக்டர் ஓட்டுநரான ராமஞ்சினியுலு என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராமஞ்சினியுலு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் உறவினரான கொண்டையா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. கொண்டையா ராமஞ்சினியுலுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சம்பவம் நடந்த அன்று கொண்டாயா ராமஞ்சினியுலுவை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு உடலை அப்பகுதியில் இருக்கும் குளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. தனது மனைவியுடன் ராமஞ்சினியுலு தொடர்பில் இருந்ததால் அவரை கொலை செய்ததாக கொண்டையா கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அவருக்கு யாராவது உதவி செய்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…