விளையாட்டு வினையானது..! முதலையை சீண்டிய நபர்… அடுத்து நடந்த டுவிஸ்ட்டால் மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற நபர் – பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

By Soundarya on மாசி 19, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு பிரம்மாண்ட முதலையை இருவர் குச்சியால் சீண்டி வம்பிழுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. நிலத்தில் அமைதியாகப் படுத்துக் கிடந்த அந்த முதலையை ஒருவர் சீண்டியவுடன், அது கோபமடைந்து மின்னல் வேகத்தில் அவர்களைத் தாக்கத் தொடங்கியது. அந்த பயங்கரமான தாக்குதலிலிருந்து ஒருவர் நழுவிவிட, மற்றொருவர் முதலையிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகள் காண்போரை உறைய வைக்கின்றன.

 

   
View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. வனவிலங்குகளை, குறிப்பாக முதலையை போன்ற ஆபத்தான நீர்வாழ் உயிரினங்களை விளையாட்டிற்காகவோ அல்லது சாகசம் என்ற பெயரிலோ சீண்டுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்தத் தாக்குதல் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. முதலையின் ஆக்ரோஷமான எதிர்வினையைப் பார்த்த இணையவாசிகள், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.