என்னது… வரலட்சுமி திருமணம் செய்ய போகும் நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி , 15 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கா…? வெளியான ஷாக்கிங் தகவல்…

By Begam on பங்குனி 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரின் மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக களமிறங்கியவர் நடிகை வரலக்ஷ்மி.. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் கூட தெலுங்கில் வெளியான ‘ஹனுமேன்’ படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

   

தற்போது தமிழில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘ரயான்’ படத்தில் நடித்து வருகிறார். இது தவிர வேறு சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். நடிகை வரலட்சுமி சரத்குமார் திடீரென தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். நடிகை வரலட்சுமிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் மார்ச் 1ஆம் தேதி மும்பையில் இரு வீட்டாரின் பெற்றோர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

   

 

அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவியது. இந்நிலையில் , தற்பொழுது நடிகை வரலட்சுமி திருமணம் செய்து கொள்ள போகும் நபர் குறித்த ஷாக்கிங் தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, தொழில் அதிபர் நிகோலாய் சச்தேவுக்கு இது 2 வது திருமணமாம். இவருக்கு ஏற்கெனவே கவிதா என்பவருடன் திருமணம் நடந்ததாகவும், 15  வயதில் மகளும் உள்ளாராம்.

#image_title

முதல் மனைவியான கவிதா Mrs Gladrags in 2010 டைட்டில் வின்னர் ஆவார். இவரின் மகள்  weightlifting  champion.    இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதன்பின்னர் நடிகை வரலட்சுமி இவரை காதலித்து தற்பொழுது இருவீட்டார் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.