“இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல” சாலையில் ஸ்கேட்டிங் செய்த நபர்… கூட்டமாக சென்ற எருமை மாடுகள்… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு வாலிபர் சாலையில் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எருமை மாட்டுடன் மோதும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் பார்ப்பவர்களை ஒருபுறம் சிரிக்க வைத்தாலும், மறுபுறம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அந்த வீடியோவில், ஒரு நபர் மிகவும் லாவகமாக சாலையில் ஸ்கேட்டிங் செய்து கொண்டு செல்வதைக் காணலாம். அப்போது சாலையின் குறுக்கே எருமை மாடுகள் கூட்டம் நின்றுகொண்டிருக்கிறது. அந்தப் பாதையின் நடுவே இருந்த சிறிய இடைவெளி வழியாக வேகமாகச் சென்றுவிடலாம் என அந்த நபர் நினைத்தார். ஆனால், அவர் அந்தப் பாதையைக் கடக்க முயன்ற அதே நேரத்தில், ஒரு எருமை மாடு திடீரென ஓடத் தொடங்கியதால், அவர் பலமாக அந்த எருமையின் மீது மோதி கீழே விழுந்தார்.

   

X (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்ட இந்த 12 விநாடி வீடியோ, லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. எருமை மாடு பயந்து ஓடியதால் இந்த விபத்து நடந்ததாகச் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். “எந்தவொரு இடைவெளியும் நமக்கானது என்று நினைத்துவிடக் கூடாது” என்ற பாடத்தை இந்த வீடியோ உணர்த்துவதாகப் பயனர்கள் கிண்டலாகவும், எச்சரிக்கையாகவும் பதிவிட்டு வருகின்றனர்.