ஐயோ..! உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா..? கதறிய மனைவி… நெஞ்சு வலியால் துடித்த கணவர்… யாருமே உதவிக்கு வராததால் பரிதாபமாக போன உயிர்…!!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love

பெங்களூருவில் மார்பு வலியால் துடித்த இளைஞருக்கு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால், அவர் உயிரிழந்த துயரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, சாம்ராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடரமணன் (34). இவர் ஒரு மெக்கானிக் ஆவார். இவருக்கு  நேற்று திடீரென மார்பு வலி ஏற்பட்டுள்ளது.  சிகிச்சைக்காக அவர் முதலில் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு போதிய வசதிகள் இல்லை எனக் கூறி அவரைப் பெரிய மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின் மற்றொரு மருத்துவமனைக்குச் சென்றபோதும், அங்கும் உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

வலியால் துடித்த வெங்கடரமணன் சாலையில் மயங்கி விழுந்தபோது, அங்கிருந்தவர்கள் அவருக்கு உதவ முன்வரவில்லை. விபத்து மற்றும் அவசர காலங்களில் மக்கள் உதவத் தயங்குவது ஒரு உயிரைக் காக்கும் “பொன்னான நேரத்தை” (Golden Hour) வீணடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனது மகன் உயிரிழந்த நிலையிலும், வெங்கடரமணனின் பெற்றோர் அவரது கண்களைத் தானம் செய்துள்ளனர். மகனின் மரணம் மற்றவர்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக அமையட்டும் என்ற அவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமூகத்தில் மறைந்து வரும் மனிதநேயம் மற்றும் அவசர காலச் சிகிச்சையில் மருத்துவமனைகளின் அலட்சியம் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளது.