இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து எதையும் யோசிக்காமல் அப்படியே செய்து பார்க்கும் போக்கு சிறுவர்களிடையே அதிகரித்துள்ளது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் ரீல்ஸ் வீடியோ ஒன்றைப் பார்த்து ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் சிலர், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஒரு உயிருக்கு ஆபத்தான வெடிபொருளைத் தயாரித்துள்ளனர்.
மேலும் விளையாட்டாகத் தொடங்கிய இந்த முயற்சி பெரும் விபத்தில் முடியவிருந்த நிலையில், இதனை தற்செயலாகக் கவனித்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் அறிவை வளர்த்தாலும், மறுபுறம் சரியான வழிகாட்டுதல் இல்லாதபோது அது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
“>
இந்நிலையில் தங்கள் குழந்தைகள் அலைபேசியில் என்ன பார்க்கிறார்கள், எதைப் பின்பற்றுகிறார்கள் என்பதில் பெற்றோர்கள் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். வெறும் ‘லைக்ஸ்’ மற்றும் ‘வியூஸ்’களுக்காகப் பகிரப்படும் பல வீடியோக்கள் நிஜ வாழ்க்கையில் உயிருக்கே உலைய வைக்கும் என்பதைச் சிறுவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…