அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! பாலத்தின் மின் கம்பியில் சிக்கிய சட்டை…. இளைஞரை மீட்ட ‘ரியல்’ ஹீரோக்கள்…! வைரல் வீடியோ…!

By Devi Ramu on மார்கழி 23, 2025

Spread the love

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள நந்தேசரி மேம்பாலத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சித்தராஜ் சிங் மஹிடா தனது இருசக்கர வாகனத்தில் பாலத்தைக் கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பின்னால் இருந்து மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பாலத்தின் தடுப்புச் சுவரைக் கடந்து கீழே விழ இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அவரது சட்டை அங்கிருந்த மின் கம்பத்தில் சிக்கிக்கொண்டது. சுமார் 20 அடி உயரத்தில் அந்த இளைஞர் உயிருக்குப் போராடியபடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த காட்சி காண்போரை பதற வைத்தது.

   

இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் உடனடியாகத் திரண்டு, ஒருவருக்கொருவர் கைகோர்த்து அந்த இளைஞரை பத்திரமாக மேலே இழுத்து மீட்டனர். விபத்தின் தாக்கத்தால் மயக்கமடைந்த சித்தராஜ் சிங், உடனடியாக வதோதரா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

   

தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் தற்போது சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து நந்தேசரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோதிவிட்டுத் தப்பிய வாகனத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.