உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், வாகனத்தைச் சுத்தம் செய்யுமாறு மனைவியைக் கட்டாயப்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த கணவர், ஆம்புலன்சுக்குள் வாந்தி எடுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், வாந்தித் துளிகளை முதலில் சுத்தம் செய்யாவிட்டால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று கூறி நோயாளியையும் அவரது மனைவியையும் மிரட்டியுள்ளார்.
ये जो महिला एम्बुलेंस को पानी से धो रही है, इसका पति एम्बुलेंस के अंदर दर्द से तड़प रहा है.
महिला को एम्बुलेंस को पानी से इसलिए धोना पड़ रहा है क्योंकि उसके पति ने उल्टी की है, जिसके छींटे एम्बुलेंस पर आ गए हैं और बद्तमीज एंबुलेंस ड्राइवर अस्पताल जाने से पहले उल्टी साफ़ करा रहा… pic.twitter.com/jbUpI6OuvD
— Priya singh (@priyarajputlive) December 15, 2025
உதவியற்ற நிலையில் இருந்த அந்தப் பெண், வலியால் உள்ளே அழுதுகொண்டிருக்கும் கணவரைப் பார்த்தவாறே, ஆம்புலன்சில் இருந்த வாந்தி கறைகளைச் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த மனிதநேயமற்ற சம்பவத்தைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் சத்னாவில் நடந்ததாகக் கூறப்பட்டாலும், ஆம்புலன்ஸின் பதிவு எண் சத்தீஸ்கர் மாநிலக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்தச் செயல் பரவலான கண்டனத்தைத் தூண்டியுள்ளது.
