“அழுகிறியா செல்லம்?”… மனிதக் குரலில் பேசி குழந்தையை சமாதானப்படுத்திய கிளி… வைரலாகும் நெகிழவைக்கும் வீடியோ…!!!

By Rajeshwari on மாசி 28, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு வளர்ப்பு கிளி அழும் குழந்தையை மனித குரலில் பேசி சமாதானப்படுத்தும் காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் தனது குழந்தையை மடியில் வைத்திருக்கும்போது குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. அப்போது அங்கிருக்கும் கிளி, மிகவும் கனிவான குரலில் “என்ன விஷயம்?” என்று மனிதர்களைப் போலவே வினவுகிறது.

மேலும் அதுமட்டுமல்லாமல், அக்குழந்தையை “பேபி” என்று அழைத்து, தொடர்ந்து அதனுடன் கொஞ்சி விளையாடி அமைதிப்படுத்த முயற்சிக்கிறது. ஒரு பறவை வெறும் வார்த்தைகளை மட்டும் ஒப்புவிக்காமல், அந்தச் சூழலைப் புரிந்து கொண்டு ஒரு குடும்ப உறுப்பினரைப் போல அக்கறையுடன் நடந்துகொள்வது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

   

இதனால் அசோக்குமார் போரா என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, இணையத்தில் சுமார் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. கிளியின் இந்த அன்பான செய்கையைக் கண்ட நெட்டிசன்கள், “இது வெறும் வளர்ப்புப் பறவை மட்டுமல்ல, வீட்டின் பொறுப்புள்ள ஒரு பெரிய அண்ணனைப் போலச் செயல்படுகிறது” என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

   

இந்நிலையில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பையும், அவற்றின் உணர்வுப்பூர்வமான புரிதலையும் வெளிப்படுத்தும் இந்த அழகிய தருணம், தற்போது இணையவாசிகளின் மனதை வென்று வருகிறது.