Categories: சினிமா

திருட்டு கதை பஞ்சாயத்தில் சிக்கிய பராசக்தி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவால் படம் ரிலீஸாவதில் சிக்கல்!

Spread the love

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவர உள்ள பராசக்தி படம் திருட்டு கதை பஞ்சாயத்தில் இப்போது சிக்கியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள பராசக்தி படம் வரும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பராசக்தி படத்தின் கதை தன்னுடையது என்று திரைப்பட இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது, நான் எழுதிய செம்மொழி என்ற கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. எனது அனுமதி இன்றி உருவாக்கப்பட்ட இந்த படத்தை வெளியிட உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் உண்மைத்தன்மையை கண்டறிய முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி வரும் ஜனவரி 2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் செம்மொழி மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு கதைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து எழுத்தாளர் சங்கம் ஆய்வு செய்து அந்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. எழுத்தாளர் சங்கத்தின் இந்த அறிக்கை ஜனவரி 2ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே பராசக்தி படத்தின் வெளியீடு குறித்த இறுதி முடிவு தெரிய வரும்.

Elango

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

4 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

4 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

5 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

5 மணத்தியாலங்கள் ago