தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் புதிய கூட்டணி கணக்குகள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் ஆகியோர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட இந்த இரண்டு தலைவர்களும் தங்கள் அரசியல் இருப்பை தக்க வைக்க ஒரு வலுவான மாற்றுக் கட்சியை தேடி வருகிறார்கள்.
சமீபகாலமாகவே ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர் விஜய் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளை தொடர்ந்து பாராட்டி பேசி வருவது கூட்டணிக்கு அச்சாரமாக பார்க்கப்படுகிறது. விஜயை பொறுத்தவரையில் அதிமுகவின் வாக்கு வங்கியை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்றால் இந்த இயக்கத்தின் பாரம்பரிய முகங்களான ஓபிஎஸ் போன்றவர்களின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக்கழகம் ஒரு புதிய மற்றும் தூய்மையான அரசியலை முன் வைப்பதால் பழைய அரசியல் முகங்களை சேர்ப்பது கட்சியின் பிம்மத்தை பாதிக்குமா என்ற தயக்கமும் விஜயிடம் உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஒரு மெகா கூட்டணி அவசியமென்பதை உணர்ந்த விஜய் இவர்களுக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முக்கோண கூட்டணி உறுதியானால் அது தென்மாவட்டங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…