இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்… சுக்கிரன் – சனி சேர்க்கையால் உருவாகும் பஞ்சாங்க யோகம்… இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்.. உங்க ராசி இதில் இருக்கா?

By Muthu Mani on வைகாசி 13, 2026

Spread the love

மே 12-ம் தேதியில் இருந்து உருவாகியுள்ள சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கையினால் பஞ்சாங்க யோகம், ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. செல்வம், சுகபோகம் மற்றும் சமூக அந்தஸ்திற்கு காரணியான சுக்கிரனும், கர்ம பலன்களை வழங்கும் சனியும் இணைவது குறிப்பிட்ட ராசிகளுக்கு ராஜயோக பலன்களை வாரி வழங்கவுள்ளது. குறிப்பாக ரிஷபம், சிம்மம் மற்றும் துலாம் ராசியினருக்கு இந்த காலகட்டம் பொற்காலமாக அமையப்போகிறது.

ரிஷப ராசி

   

இந்த யோகம் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நிம்மதியைத் தரும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு, முடங்கிக் கிடந்த திட்டங்கள் வேகம் எடுக்கும். பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பரிமாணங்களை எட்டுவதுடன், மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்வி வாய்ப்புகள் தேடி வரும்.

   

சிம்ம ராசி

 

பொறுத்தவரை, இந்த பஞ்சாங்க யோகம் அவர்களின் செல்வாக்கையும் கௌரவத்தையும் உயர்த்தும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் கிடைக்கக்கூடும். உங்களின் தனித்துவமான தலைமைப் பண்பு மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும் சூழல் உருவாகியுள்ளது. காதல் மற்றும் குடும்ப உறவுகளில் நிலவி வந்த கசப்புகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும்.

துலாம் ராசி

நிதி நிலைமையில் அபாரமான ஸ்திரத்தன்மை உண்டாகும். வசதி வாய்ப்புகள் பெருகி வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி கிடைப்பதோடு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக இந்த யோகம் உடல் ஆரோக்கியத்திலும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும்.