கிளாமர் உலகிற்கு முழுக்கு… “என் மகன் மட்டும் இல்லைன்னா”… கண்ணீர் விட்ட நடிகை புவனேஸ்வரி… நெஞ்சை உலுக்கும் பேட்டி…!!

By Gayathri on ஐப்பசி 27, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’, ‘பிரியமானவளே’ போன்ற பல திரைப்படங்களிலும், ‘சித்தி’ உள்ளிட்ட புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை புவனேஸ்வரி. குடும்பச் சூழல் காரணமாகத் திரைத்துறைக்கு வந்த இவர், தற்போது கலைத்துறையிலிருந்து முழுமையாக விலகி ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்து வரும் இவர், தினமும் சுமார் 300 ஏழை எளிய மக்களுக்குத் தன் கரங்களால் உணவு வழங்கி சமூகத் தொண்டாற்றி வருகிறார்.

சமீபத்திய பேட்டியில் தனது வாழ்க்கை மாற்றம் குறித்துப் பேசிய அவர், முன்பு குடும்பத்தின் சூழ்நிலைக்காகக் கவர்ச்சி வேடங்களில் நடித்ததாகவும், இனி அப்படிப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார். குடும்பத்தைக் காக்கப் போராடிய சூழலும், திரை வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களுமே தன்னை மனதளவில் ஒரு வலிமையான பெண்ணாக மாற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையின் உண்மையான அமைதியை ஆன்மீகத்திலும், பிறருக்குச் செய்யும் உதவியிலுமே கண்டுகொண்டதாக அவர் கூறியுள்ளார்.

   

மேலும், தனது வாழ்வில் பல துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொண்டதாகக் கூறிய புவனேஸ்வரி, தான் பட்ட கஷ்டங்களை நேரடியாகப் பார்த்தே வளர்ந்ததால் தன் மகன் தன்னை முழுமையாகப் புரிந்து கொண்டதாகவும், வதந்திகளைப் பொருட்படுத்துவதில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். திருமண வாழ்க்கையில் பணத்தை விட பரஸ்பர புரிதலும் அன்பும்தான் முக்கியம் எனப் பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள அவரது இந்த ஆன்மீகப் பயணம் மற்றும் அன்னதானச் சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.