நிர்வாகிகள் மொத்தமாக ‘எஸ்கேப்’.. காலியாகும் கூடாரம்… ஓபிஎஸ்-ஸின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி..??

By Soundarya on மாசி 3, 2026

Spread the love

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மாற்று முகாம்களுக்குத் தாவி வருவது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் விஜயபார்த்திபன் தலைமையில் சுமார் 300 பேர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மறுபுறம், சேலம் ஓமலூர் அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேனி மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர். குறிப்பாக, மீனாட்சிபுரம் பேரூராட்சித் தலைவர் திருப்பதி தலைமையிலான குழுவினர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.