“அப்பாவுக்கு தெரியாம இரவில் போட்ட ஓட்டு”…. பேரவையில் அமைச்சர் ஆனந்த் வெளியிட்ட அந்த குட்டி ஸ்டோரி…. அதிர்ந்துபோன எதிர்க்கட்சி….!

By Nanthini on ஆவணி 29, 2026

Spread the love

தவெகவுக்கு எதிர்க்கட்சி சிட்டிங் MLA மகள் வாக்களித்ததாக அமைச்சர் ஆனந்த் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சட்டப்பேரவையில் அமைச்சர் என்.ஆனந்த் பேசிய இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ யார் என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. 2016-ல் வெற்றி பெற்று, 2021-ல் தோல்வியடைந்து, பின்னர் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றவர் என்ற குறிப்பைக் கொண்டு அவர் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தனது சொந்த குடும்ப உறுப்பினர்களே கட்சி எல்லைகளைக் கடந்து, தவெக தலைவர் விஜய்யின் அலையால் ஈர்க்கப்பட்டு வாக்களித்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியிலும் தவெக பெற்றிருக்கும் செல்வாக்கை நிரூபிக்கவே அமைச்சர் ஆனந்த் இந்தச் சம்பவத்தை பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.