“கரூர் to கோவை”…. செந்தில் பாலாஜி கையில்தான் சாய்ஸ்…. ஸ்டாலின் போட்ட அந்த ஒரு மாஸ் ‘கண்டிஷன்’… கடுப்பில் மா.செ.,க்கள்….!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதே வேளையில், நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி செந்தில் பாலாஜிக்கு திமு கழகத் தலைமை சிறப்பு முன்னுரிமை அளித்து, கரூர் அல்லது கோவை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொறுப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அரிய வாய்ப்பை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக விதிமுறைகளின்படி, ஒரு தலைவருக்கு எந்தப் பகுதியில் வாக்குரிமை உள்ளதோ, அங்கு மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படுவது வழக்கம் என்றிருக்க, செந்தில் பாலாஜிக்கு மட்டும் இந்த விதிவிலக்கு ஏன் அளிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தங்கள் அதிருப்தியையும் புலம்பலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.