தமிழக அரசியலில் அமைச்சர்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின்அடுத்தடுத்த நடவடிக்கைகள் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளன. முன்னாள் அமைச்சர் ஈ.வி. வேலுவைத் தொடர்ந்து, அடுத்த டார்கெட் லிஸ்ட்டில் செந்தில் பாலாஜி இருப்பதாகக் கூறப்படும் தகவல் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே அவரது சகோதரர் அசோக் குமாரைக் கைது செய்ய கரூர் போலீஸார் தீவிரம் காட்டி வரும் நிலையில், திமுக ஆட்சியிலேயே மத்திய அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுப் பிணையில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜிக்கு, மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக வரவிருக்கும் இந்நடவடிக்கை அரசியலில் அடுத்த பெரிய அடியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதுமட்டுமன்றி மூர்த்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பி.கே. சேகர்பாபு ஆகியோரும் இந்த விசாரணைப் பட்டியலில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளதாகத் வெளியாகும் தகவல்கள் ஆளுங்கட்சி தரப்பில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
