அதிமுகவின் முகமாகத் திகழ்ந்த ஓ. பன்னீர்செல்வம் திடீரென திமுகவை நோக்கித் தனது அரசியல் நகர்வுகளை மாற்றிக்கொண்டது, அவரது தீவிர ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அதிமுகவே கதி” என்று நம்பி ஓபிஎஸ் பின்னால் நின்றவர்கள், அவர் திமுகவில் தஞ்சம் அடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த அரசியல் மாற்றத்தால் ஓபிஎஸ் அணியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதோடு, அவரது பிடியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் தற்போது அடுத்தடுத்து விலகி வருவது அந்த அணியைப் பலவீனப்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் தற்போது மீண்டும் தங்களது “தாய் கழகமான” அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்து வருகின்றனர். நேற்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஈபிஎஸ்ஸைச் சந்தித்து அதிமுகவில் இணைந்த நிலையில், இன்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் அதே பாதையைப் பின்பற்றி ஓபிஎஸ்ஸுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அடுத்தடுத்து நிகழும் இந்த அணி மாற்றங்கள், ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அதிமுக தொண்டர்களிடையே இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…