ஈவு இரக்கமே இல்லையா..? 5 வயது சிறுவனை எட்டி உதைத்த பக்கத்து வீட்டுக்காரர்… நிலைகுலைந்து கீழே விழும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி…!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

பெங்களூரு தியாகராஜ்நகரில், பாட்டி வீட்டு வாசலில் பூப்பந்து விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனை, அண்டை வீட்டுக்காரர் பின்னாலிருந்து எட்டி உதைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. டிசம்பர் 14, 2025 அன்று நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளது. மதியம் 1:15 மணியளவில் மற்ற குழந்தைகளுடன் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, வீட்டிலிருந்து வெளியே வந்த ரஞ்சன் என்பவர், ஓடிச்சென்று சிறுவனின் முதுகில் பலமாக உதைத்துள்ளார்.

அடிபட்ட சிறுவன் நிலைகுலைந்து கீழே விழ, ரஞ்சன் எவ்வித சலனமுமின்றி அங்கிருந்து நடந்து சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக ரஞ்சன் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 115(2)-ன் கீழ் பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.