சட்டப் பீட விரிவுரையாளரான பேராசிரியர் ஃபேப்ரிசியோ அன்டோனியோ டா சில்வா, தனது மனைவி மற்றும் 10 வயது மகனுடன் இருந்தபோது கொலை முயற்சித் தாக்குதலுக்கு உள்ளானார்.
அவரது அண்டை வீட்டார் ஒருவர், கையில் அரிவாளுடன் (machete) பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மனைவி மற்றும் மகனின் கண் முன்னாலேயே அவரைக் கொல்ல முயன்றுள்ளார்.
🇧🇷 A neighbor with a machete breaks into the professor’s house and tries to kill him in front of his wife and son.
Professor Fabricio Antonio da Silva, a lecturer at the Faculty of Law, was the victim of an attempted murder when he was with his wife and 10-year-old son.… pic.twitter.com/ystPmOaGmU
— Dane (@UltraDane) December 17, 2025
இதுகுறித்து பேராசிரியரின் கூற்றுப்படி, அந்தத் தாக்குதல்தாரி ஏற்கனவே அவரது கலப்பு இனக் குடும்பத்திற்கு எதிராக இனவெறிச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த கருத்து வேறுபாடு தீவிர வன்முறையாக மாறியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஃபேப்ரிசியோவின் முகம், முதுகு, மணிக்கட்டுகள் மற்றும் முழங்கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியவரின் தற்போதைய உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
