தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி…! நள்ளிரவில் வந்த மர்ம நபர்… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்….!

By Devi Ramu on கார்த்திகை 16, 2025

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டம், பிஜாரா கிராமத்தைச் சேர்ந்தவர் லால் ராம் குஷ்வாலா (40). இவரது மனைவி பிரபா குஷ்வாலா (35). இந்தத் தம்பதியினர் அருகிலுள்ள சனிரா கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பணிபுரிந்து வந்தனர். வேலையின் காரணமாக, அவர்கள் அந்தத் தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே தங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் அவர்கள் தங்கியிருந்த தோட்டத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கே உறங்கிக் கொண்டிருந்த லால் ராம் மற்றும் பிரபா இருவரையும் சரமாரியாக வெட்டிச் சென்றதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

   

இந்த இரட்டைக் கொலை குறித்து நேற்று காலை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய மர்மக் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.