செத்துப்போன எப்ஸ்டீன் மீண்டும் வந்தாரா?… புளோரிடா நெடுஞ்சாலையில் நடந்த பரபரப்பு … உண்மையை கேட்டு மிரண்டு போன நெட்டிசன்கள்…!!!

By Rajeshwari on பங்குனி 20, 2026

Spread the love

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் நபர், சர்ச்சைக்குரிய தொழிலதிபரான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் போலவே அச்சு அசலாக இருந்ததால், எப்ஸ்டீன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற வதந்திகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவின.

மேலும் ஐ-95 நெடுஞ்சாலையில் தனது காரில் சென்றுகொண்டிருந்த அந்த நபரை யாரோ வீடியோ எடுத்து “எப்ஸ்டீன் உயிரோடு இருக்கிறார்” எனக் கூறி பதிவிட்டதே இந்த குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, வீடியோவில் இருந்த நபர் நேரில் தோன்றி விளக்கம் அளித்துள்ளார். தனது பெயர் ‘பாம் பீச் பீட்’ என்றும், தனக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

   

இந்நிலையில் தான் கார் ஓட்டிச் சென்றபோது யாரோ ரகசியமாக வீடியோ எடுத்தது தனக்குத் தெரியாது என்றும், திடீரென தனது செல்போனுக்கு வந்த ஆயிரக்கணக்கான அறிவிப்புகளைப் பார்த்து அதிர்ந்து போனதாகவும் அவர் தெரிவித்தார். எப்ஸ்டீனின் உருவ ஒற்றுமையால் ஏற்பட்ட இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்கள் எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன என்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.