உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவரும், கடந்த 2012-ம் ஆண்டு ‘மிஸ் புனே’ அழகிப் பட்டம் வென்றவருமான ட்விஷா ஷர்மா (33) என்ற பெண் போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ல் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான சமர்த் சிங் என்ற வழக்கறிஞரை ட்விஷா கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு போபாலில் கணவர், மாமனார் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதியான மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருடன் வசித்து வந்த நிலையில், கடந்த மே 12 அன்று அவர் சடலமாக மீட்கப்பட்டார். ட்விஷாவின் மரணத்திற்கு மாமியார் குடும்பத்தினரின் கொடூர வரதட்சணை கொடுமையே காரணம் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை தனது குடும்பத்தினருடன் பேசியுள்ள ட்விஷா, தனது தோழிக்கு இன்ஸ்டாகிராமில், “நான் மாட்டிக்கொண்டேன். ஆனால் நீ மட்டும் மாட்டிக்கொள்ளாதே…” என உருக்கமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும், அவர் வீட்டின் மாடிக்குச் செல்லும் சிசிடிவி காட்சியும், பின்னர் அவரது உடலை மூன்று ஆண்கள் தூக்கி வரும் காட்சியும் வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபால் எய்ம்ஸ் பிரேத பரிசோதனையில் தற்கொலை உறுதி செய்யப்பட்டாலும், தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பெல்ட்டை காவல்துறையினர் மருத்துவர்களிடம் ஒப்படைக்காதது மற்றும் ட்விஷாவின் மாமியார் ஓய்வுபெற்ற நீதிபதி என்பதால் வழக்கை திசைதிருப்ப முயல்வது போன்ற புகார்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
மறுபுறம், ட்விஷா மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் போதைக்கு அடிமையானவர் என்று அவரது மாமியார் தரப்பு கூறிய குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனப் போலீசார் மறுத்துள்ளனர். ட்விஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் வீட்டின் முன்பு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் கணவர், ஓய்வுபெற்ற நீதிபதியான மாமியார் மற்றும் மாமனார் ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அங்குஷ் சவுத்ரி என்பவருக்கும், லலிதா என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கும் இடையே…
அகமதாபாத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற நகைக்கடையில் பணிபுரிந்து வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்ற இளம்பெண், ஏற்கனவே திருமணமான தனது காதலனுடன்…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அண்மையில் இணையத்தில் பரப்பப்பட்ட பல்வேறு போலிச் செய்திகளை…
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் (Ebola Virus) மிகத் தீவிரமாகப் பரவி…
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஸ்மிதா சதாசிவம் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்தித்துப்…
தூத்துக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற முதியவர், யாசகம் எடுத்துச் சேர்த்த பணத்தில் இருந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை…