80,000 பேர்..! மலேசியாவில் வரலாறு படைத்த ‘ஜனநாயகன்’ இசைவெளியீட்டு விழா… புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து சாதனை…!

By Soundarya on மார்கழி 28, 2025

Spread the love
எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கிட் ஜலீல் (Bukit Jalil) தேசிய மைதானத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
சுமார் 80,000 பேர் அமரக்கூடிய அந்தப் பிரம்மாண்ட மைதானமே அதிரும் வகையில், ரசிகர்கள் திரளாகத் திரண்டு இந்த விழாவைக் கொண்டாடினர். இந்த நிலையில், மலேசியாவில் இதுவரை நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களிலேயே அதிகப்படியான மக்கள் கலந்துகொண்ட நிகழ்வு என்ற பெருமையை ‘ஜனநாயகன்’ விழா பெற்றுள்ளது. இதன் மூலம் ‘மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ (Malaysia Book of Records) இடம் பிடித்து, இந்தத் திரைப்படம் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.