தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரஜினி, கமல். 40 வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவை ஆண்டு வருகிறார்கள். துவக்கத்தில் கமல் படங்களில் தான் ரஜினி நடித்து வந்தார். இருப்பினும் இருவரும் நண்பர்களாக பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்கள். சில படங்களில் கமலுக்கு வில்லனாகவும் ரஜினி நடித்திருக்கிறார். ரஜினி கமல் போட்டி என்பது பல வருடங்களாக இருந்து வருகின்றது.
கமலை தவிர வேறு யாரையும் தனக்கு போட்டியாக ரஜினி நினைத்தது கிடையாது. ஆனால் இவர்களின் நட்பு என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு கட்டத்தில் கமலை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார் ரஜினிகாந்த். கமலுக்கு பின்னால் அறிமுகமானாலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று முன்னேறி தற்போது மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வருகிறார் .கமல் மீது எப்போதும் நல்ல அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர் ரஜினி. அதேபோலதான் கமலும் இருப்பார்.
முடிவுகளை எடுக்க காரணமானவர் கமலஹாசன் தான் .இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்த ஹீரோவின் சம்பளம் இரண்டு பேருக்கும் பிரித்துக் கொடுப்பார்கள். எனவே இருவரும் தனித்தனியாக நடிக்கலாம் என ரஜினியிடம் கூறி அவரை தனி ரூட்டில் பயணிக்க வைத்தார். ரஜினி தனி ஹீரோவாக நடித்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் ஆக மாறி இருந்தார். சுமார் 20 வருடத்திற்கு முன்பாகவே கோடிகளை சம்பளம் வாங்கிய நடிகர்கள் என்றால் அது ரஜினிகாந்த்தான்.
சில படங்களில் 100 கோடிக்கும் மேல் அவர் வாங்கி இருக்கிறார். முதன்முதலாக ரஜினி ஒரு கோடி சம்பளம் வாங்க காரணமாக இருந்ததும் கமல்தான். ஒருமுறை ரஜினியிடம் பேசிய கமல் ரஜினி இனிமேல் நீங்கள் ஒரு கோடி சம்பளம் கேளுங்கள். இதை கேட்டதும் ரஜினி ஷாக் ஆகி ஏன் கமல் என இண்டஸ்ட்ரியிலிருந்து காலி பண்ண பார்க்கிறீர்கள்? என்று கேட்டாராம். அதற்கு கமல் கூறிய பதில் ‘நீங்கள் நடிக்கும் படங்களில் நல்ல லாபம் வருகின்றது என்பதை உங்களிடம் யாரும் கூற மாட்டார்கள். உங்கள் படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றது. நல்ல லாபம் தருகின்றது. எனவே சம்பளத்தை உயர்த்தி கேளுங்கள்’ என்று கூறி அவரது சம்பளத்தை ஒரு கோடி ஆக்கியது கமல் தான். இப்படி இருவரும் தங்களது நட்பை தற்போது வரை வளர்த்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…