டாக்டர் பொண்ணுக்கு இவ்ளோ கண்டிஷனா..? தமிழா தமிழா மேடையில் மாப்பிள்ளை லிஸ்ட் போட்டு அதிரவைத்த அம்மா..! வைரல் வீடியோ..!!

By Swetha on வைகாசி 26, 2026

Spread the love

இந்த வாரம் “திருமணத்தில் யார் கை ஓங்கி இருக்கிறது? மணமகன் வீட்டார் Vs மணமகள் வீட்டார்” என்ற தலைப்பில் விறுவிறுப்பான விவாதக் களம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில சுவாரஸ்யமான காட்சிகள் அடங்கிய முன்னோட்டக் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றது.

அதில், மணமகள் வீட்டார் சார்பில் பங்கேற்ற பெண் ஒருவரின் தாய், தன் மகளுக்கு வரப்போகும் மாப்பிள்ளை குறித்துப் பேசும் காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. தன் மகளைக் கஷ்டப்பட்டு மருத்துவம் படிக்க வைத்திருப்பதாகக் கூறும் அந்தத் தாய், தனக்கு வரப்போகும் மருமகனும் கண்டிப்பாக ஒரு மருத்துவராகவே இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.

   

https://www.instagram.com/reel/DYtg9ooAS2n/?utm_source=ig_web_copy_link

   

அத்தோடு நிறுத்தாமல், மாப்பிள்ளைக்கு என்று சொந்த வீடு, கார் இருக்க வேண்டும் என்றும், தங்களது மகள் சொந்தமாக ஒரு மருத்துவமனை கட்டுவதற்குத் தேவையான அளவிற்கான பெரும் தொகை வங்கியில் சேமிப்பாக இருக்க வேண்டும் என்றும் அடுக்கடுக்கான எதிர்பார்ப்புகளின் பட்டியலை அவர் வாசிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.