மகள்தான் போகணுமா..? மாப்பிள்ளையை அனுப்பி வைங்க..! தமிழா தமிழா மேடையில் மாஸ் காட்டிய தாய்.. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

By Swetha on வைகாசி 26, 2026

Spread the love

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சமூகப் பிரச்சினைகளையும், சுவாரசியமான விவாதங்களையும் முன்வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், விஜய் டிவியின் பிரபல ‘நீயா நானா’ நிகழ்ச்சிக்கு இணையாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு இருதரப்பு கருத்துக்களை மோதவிடும் இந்த நிகழ்ச்சியில், நடப்பு வாரத்திற்கான தலைப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வாரம் “திருமணத்தில் யார் கை ஓங்கியிருக்கிறது? மணமகன் வீட்டாரா அல்லது மணமகள் வீட்டாரா?” என்ற தலைப்பில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண் வீட்டார் தரப்பு, தற்கால திருமண முறைகள் குறித்தும், தங்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பல அதிரடியான கண்டிஷன்களை அடுக்கினர். குறிப்பாக, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் திருமணத்தின் போது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் விட்டுக்கொடுத்தல்களைப் பற்றி ஆவேசமாகப் பேசினர்.

   

விவாதத்தின் உச்சகட்டமாக, ஒரு பெண்ணின் தாய் பேசும்போது, “இதுவரைக்கும் நாங்கதான் எங்க பொண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வச்சோம்… இனி அவங்க விருப்பப்பட்டா அவங்க வீட்டு மாப்பிள்ளையை எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கட்டும்” என்று அதிரடி பஞ்ச் வைத்தார். இதைக் கேட்டு வியந்துபோன தொகுப்பாளர் ஆவுடையப்பன், அந்தத் தாயின் தைரியமான பேச்சை பாராட்டி கைதட்டி வரவேற்றார். இந்த எபிசோடின் ப்ரோமோ மற்றும் தொகுப்பாளரின் இந்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்வையாளர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.