FIFA உலகக் கோப்பையில் நடந்த ட்விஸ்ட்… ஸ்பெயின் ஜெர்சியில் மியா கலிஃபா செய்த காரியம்… ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பு…!

By Visaka on ஆடி 4, 2026

Spread the love

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று ஆரவாரம் செய்வது வழக்கம். அந்த வகையில், சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட மியா கலிஃபா, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நேரில் கண்டு ரசித்துள்ளார். ஸ்பெயின் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு, கையில் பழமையான ‘Contax’ கேமராவுடன் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

https://www.instagram.com/p/DaWSpUSAfrq

   

மைதானத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து அவர் உற்சாகமடைந்த புகைப்படங்களை விட, போட்டியின் ஒரு முக்கிய தருணத்தில் அவர் காட்டிய முகபாவனைதான் தற்போது நெட்டிசன்களின் ஹாட் டாபிக். போட்டியின் நடுவே ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திர வீரரான லமின் யமால் மைதானத்தில் கீழே விழுந்து வலியால் துடித்தபோது, அதைக்கண்டு மியா கலிஃபா பதற்றமடைந்த காட்சிகள் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தருணத்தைத்தான் தமிழ்நாட்டு நெட்டிசன்கள் தங்களுக்குரிய பாணியில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

   

தமிழ்நாட்டில் துணி விற்பனை செய்யும் பெண் ஒருவர், லமின் யமாலின் பெயரைத் தெரியாமல் “லட்சுமி அம்மாள்” என்று மழலையாகக் குறிப்பிட்ட வீடியோ சில காலத்திற்கு முன்பு வைரலானது. கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூட தனது யூடியூப் பக்கத்தில் இந்த பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். தற்போது மியா கலிஃபாவின் பதிவை கண்ட தமிழ் ரசிகர்கள், “FIFA பார்க்க போன மியா கலிஃபா… நம்ம லட்சுமி அம்மாள் கீழே விழுந்ததும் துடிச்சுட்டாங்க!” என்று மீம்களைப் பறக்கவிட்டு கலகலப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ரவுண்ட் ஆஃப் 32-இல் இருந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ள பலமான ஸ்பெயின் அணி, அடுத்ததாக போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்ளவிருப்பது கால்பந்து உலகைக் கூடுதல் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.