சென்னையில் உள்ள மின் நிலையங்களை அமைச்சர் நிர்மல்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழகத்தில் மின்கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டணத்தை 6 விழுக்காடு உயர்த்துமாறு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைப்பது வழக்கம் என்று குறிப்பிட்டார். எனினும், தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான சூழல் ஏதும் இல்லை என்றும், தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
