தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியிலே தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதியில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். 14ஆம் தேதி ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். 15ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதேபோல 16 மற்றும் 17ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களிலும், 18 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
