நெல்லைக்கு அடித்த மெகா ஜாக்பாட்…! ரூ15,037 முதலீட்டு… 2,670 பேருக்கு வேலை… விக்ரம் சோலார் நிறுவனத்துடன்… சிஎம் விஜய் போட்ட மெகா டீல்…!!

By Swetha on ஆடி 10, 2026

Spread the love

தமிழகத்தில் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கும் நோக்கில், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் விக்ரம் சோலார் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இதற்காக ரூ 15,037 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,670 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் தயாரிப்பதற்கான உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்த மின்கல ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

   

விக்ரம் சோலார் குழுமம் ஏற்கனவே தமிழ்நாட்டின் ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய இடங்களில் சூரியஒளி மின்னழுத்த தொகுதி உற்பத்தி ஆலைகளை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. மேலும், கங்கைகொண்டானில் சூரியஒளி மின்னழுத்த செல்கள் மற்றும் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகத்தையும் கொண்டுள்ள நிலையில், தற்போதைய புதிய முதலீடு தமிழகத்தில் அந்நிறுவனத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.