வேலையா? வாழ்க்கையா?… 9:30 ஆனாலே நரகம் தான்… கார்ப்பரேட் கொடுமையின் உச்சம்… ஊழியர் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

By Visaka on ஆனி 28, 2026

Spread the love

வேலை செய்யும் இடத்தில் ஒரு ஊழியரின் செயல்திறன் அவரது உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல; அங்குள்ள சூழலும், குறிப்பாக மேலாளரின்அணுகுமுறையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், 24 மணி நேரமும் ஊழியர்கள் வேலைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு நச்சு மேலாளரின் கொடுமையைப் பற்றி, ஊழியர் ஒருவர் ரெடிட் (Reddit) தளத்தில் பகிர்ந்துள்ள கதை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ‘Terrible-Mention-138’ என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்ட அந்தப் பதிவில், தான் என்ன செய்கிறேன் என்பதை மேலாளர் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்பதாகவும், அலுவலக அழைப்பைத் தவறவிட்டால் உடனே தனிப்பட்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அந்த ஊழியர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தினமும் இரவு 9:30 மணிக்கு மேலாளர் வைக்கும் மீட்டிங் தான் தனக்குப் பெரும் நரகமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். குடும்பத்துடன் செலவிட வேண்டிய இந்த நேரத்தில் தினசரி மீட்டிங் வைப்பதற்குப் பதிலாக, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வைக்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை மேலாளர் நிராகரித்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த ஊழியர் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறார் என்றும், வேலையைத் தாமதப்படுத்துகிறார் என்றும் மேலாளர் பழிசுமத்தியுள்ளார். இந்தத் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பல நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான எல்லையை சரியாகப் பராமரிப்பது ஒவ்வொரு ஊழியரின் மன ஆரோக்கியத்திற்கும் எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.