கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் ஆவேசமாக உரையாற்றி, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வரும் அண்ணா பிறந்தநாள் முதல் தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று அவர் அதிரடியாக அறிவித்தார். மேடையில் உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய அவர், தான் வெறும் ‘ரீல்’ தாய்மாமன் அல்ல, மக்களின் கஷ்டங்களை உணர்ந்த ‘ரியல்’ தாய்மாமன் என்பதை இந்தத் திட்டத்தின் மூலம் செயலில் நிரூபித்துக் காட்டுவேன் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய முதலமைச்சர் விஜய், தற்போதைய ஆட்சியில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, சாதாரண மக்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதுடன் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகப் பெருமிதம் கொண்டார். கடந்த கால ஆட்சிகளில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் அனைத்துத் துறைகளிலும் கொள்ளையடித்த தீய சக்திகளும் தீர்ந்து போன சக்திகளும், தற்போதைய நல்லாட்சியைக் கண்டு அச்சமடைந்து ‘டிசைன் டிசைனாக’ பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகக் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று குறிப்பிட்டாலே எதிர்க்கட்சியினர் ஓட்டம் பிடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அஞ்சாமல் மக்கள் நலன் ஒன்றையே இலக்காகக் கொண்டு தனது அரசு தொடர்ந்து பயணிக்கும் என்று அதிரடியாகப் பேசி முடித்தார்.
