தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் தெலுங்கில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ட்ரெயினை ஒற்றை விரலால் நிறுத்துவது, காலால் மிதித்தே காரை பறக்க விடுவது என பாலகிருஷ்ணாவின் அட்ராசிட்டிகள் ஏராளம் உண்டு.
எங்கு சென்றாலும் பாலகிருஷ்ணா ஒரு பேக்கை மாட்டிக்கொண்டு தான் செல்வார். அதில் என்ன வைத்திருப்பார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீ பரத், சமீபத்தில் ஒரு தகவலை கூறியுள்ளார். பாலகிருஷ்ணாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது.
Mansion House என்ற பிராண்ட் மதுவை பாலகிருஷ்ணா விரும்பி குடிப்பாராம். இதனால் வெளிநாட்டுக்கே சென்றாலும் அந்த மது பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டுதான் செல்வாராம். அது மட்டும் இல்லாமல் மதுவில் சுடு தண்ணீரை கலந்து குடிக்கும் பழக்கம் பாலகிருஷ்ணாவுக்கு இருக்கிறது.
இதனால் அந்த பேக்கில் மதுவையும் சுடுதண்ணீரையும் எடுத்து செல்வார் என ஸ்ரீ பரத் கூறியுள்ளார். குறிப்பிட்ட பிராண்ட் மதுவை பாலகிருஷ்ணா குடிப்பதாக கூறியதிலிருந்து அந்த பிராண்டின் பங்குகள் மளமளவென உயர்ந்ததாக ஸ்ரீ பரத் கூறியுள்ளார்.