மலேசியாவில் நடைபெற்ற தனது ‘ஜனநாயகம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, சென்னை திரும்பிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விமான நிலைய வெளியேற்பு வாயிலில் ரசிகர்களின் பெரும் கூட்டத்திற்கு மத்தியில் சிக்கித் தடுமாறி கீழே விழுந்தார். நேற்று இரவு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, நீல நிறச் சட்டை அணிந்த நபர் ஒருவர் விஜய்யைப் பின்னால் இருந்து வேண்டுமென்றே தள்ளிவிட்டது போலத் தெரிவதாக அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, விஜய்க்குப் போதுமான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தவெக தொண்டர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பாதுகாப்பு குறித்துப் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடங்களில் தங்கள் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…