செங்கோட்டையன் பதவி ராஜினாமா செய்ய முக்கிய காரணம்… சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியதை தொடர்ந்து அவரது கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இருந்தாலும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்த நிலையில் ஓபிஎஸ் உடன் ஒரே காரில் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு சென்றதைத் தொடர்ந்து மொத்தமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையன் எம் எல் ஏ பதவியை இன்று ராஜினாமா செய்து உள்ள நிலையில் நாளை விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

   

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் ராஜினாமா செய்த அதற்கான காரணம் என்ன என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எம்எல்ஏ பதவியில் இருக்கும்போது வேறு கட்சியில் சேர்ந்தால் கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால்தான் எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிகம் முறை (8) வெற்றி பெற்றவர் செங்கோட்டையன். அப்படிப்பட்டவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.