“ஓபிஎஸ்-க்கு காத்திருந்த பேரதிர்ச்சி”…. அதிமுகவில் மீண்டும் இணைந்த முக்கிய புள்ளி… தென் மாவட்ட அரசியலில் திடீர் திருப்பம்….!

By Nanthini on பங்குனி 6, 2026

Spread the love

திமுகவில் ஓ. பன்னீர்செல்வம் இணைந்ததைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்களை அக்கட்சியில் சேர்க்க அவர் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்குப் பெரும் பின்னடைவாக அவரது அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் மீண்டும் அதிமுகவிலேயே ஐக்கியமாகி வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ராமசாமியின் மகனும், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவருமான டி.ஆர். சீனிவாசன், ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டது அக்கட்சி வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

ஓபிஎஸ்ஸின் அரசியல் நகர்வுகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், இத்தகைய தொடர் வெளியேற்றங்கள் ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், மீண்டும் அதிமுகவிலேயே அதிகாரம் மையம் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.