ஸ்டாலினுக்கு செம ஷாக்… திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி… குஷியில் எடப்பாடி…!

By Nanthini on ஐப்பசி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சியினரும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் 2021ல் டெல்டாவில் விட்டதை வரும் தேர்தலில் பிடிக்க அதிமுக தீவிரம் காட்டுகிறது.

அதன் ஒரு பகுதியாகவே மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் நபராகச் சென்று இபிஎஸ் பார்வையிட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒருபுறம் மாற்றுக் கட்சியினரை அதிமுகவில் இணைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் தலைஞாயிறு மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகி செல்வி சேவியர், முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.