மீனா, தனுஷ் என ராதிகா – சரத்குமார் வீட்டிற்கு படையெடுத்த திரைப்பிரபலங்கள்.. என்ன விஷேஷம் தெரியுமா..?

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

   

வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா என்பதை நாம் அறிவோம்.

வாரிசு நடிகையாக இவர் திரையுலகில் நுழைந்து இருந்தாலும், தனது திறமையின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரேயான் என்ற ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நடிகர் சரத்குமாருக்கு வரலக்ஷ்மி சரகுமார் என்ற மகள் உள்ளார். இவர் முதல் மனைவிக்கு பிறந்தவர்.

தற்பொழுது இவர்கள் மொத்தக் குடும்பமாக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோரின் புதுமனை புகுவிழா தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த புதுமனை புகுவிழாவுக்கு நடிகர் தனுஷ், மீனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வந்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.