உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் சூரஜ் குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அகன்ஷா, இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகியுள்ளனர். முதலில் நட்பில் தொடங்கிய இவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் அகன்சாவின் தாயார் தன்னுடைய மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியதில் சூரஜ் குமார், என்னுடன் தான் இருந்தார், பிறகு எங்கு சென்றார் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிரமாக விசாரித்ததில் சூரஜ் குமார் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததும் இதனை அகன்சா எதிர்த்து கேள்வி எழுப்பியதும், தொடர்ந்து தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதனால் அகன்சா சூரஜ் குமாரை அந்த உறவை கைவிட்டு தன்னுடன் திருமணம் செய்ய வலியுறுத்தியதால் சண்டை வந்துள்ளது. கோபமடைந்த சூரஜ் குமார் தனது காதலி அகண்ஷாவை தலையை பிடித்து சுவரில் அடித்து பிறகு கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பிறகு அவர் உடலை ஒரு பெரிய சூட்கேசில் அடைத்து யமுனா நதியில் வீசியதாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…
தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…
தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…
அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் இந்தத் திடீர்…