திருப்பூர் மாவட்டத்தில் பெருந்தொழு பகுதியைச் சேர்ந்த 36 வயது சித்ரா, 2020இல் கொரோனாவால் கணவர் ஜான்சனை இழந்தார். 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். பக்கத்து வீடு மெக்கானிக் கருப்பண்ணனுடன் இரு ஆண்டுகளாக நெருக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சண்டை வரவே, ஒரு மாதம் முன்பு சித்ரா அவரைத் தவிர்த்தார். அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, இருவரும் எழுத்துப்பூர்வமாக உறவு இல்லை என உறுதி அளித்தனர்.
கடந்த வாரம் கருப்பண்ணன் மீண்டும் பேச வந்தபோது சித்ரா மறுத்தார். கடந்த 12-ஆம் தேதி காலை மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு திரும்பிய சித்ராவிடம் கருப்பண்ணன் தகராறு செய்து, வீட்டுக்குள் நுழைய முயன்றார். தடுத்ததால் ஆத்திரமடைந்த கருப்பண்ணன், மறைத்திருந்த அரிவாளால் சித்ராவின் கை, கால்களை வெட்டினார்.
இதனால் இடது கை உடைந்து தொங்கியது. வலியால் அலறிய சித்ராவைப் பார்த்து மனமிரங்கிய கருப்பண்ணன், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். நண்பர்களிடம் வெட்டியதைச் சொல்லி, போலீசில் சரணடைந்தார். போலீசார் வழக்குப் பதிந்து கருப்பண்ணனை கைது செய்தனர். சித்ராவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
