உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் காதல் விவகாரம் காரணமாக அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்ராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாக்லா பூசா கிராமத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இளம் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதே நேரத்தில், காந்தி பார்க் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அந்த பெண்ணின் காதலன் சசி கபூர் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த இளைஞன் தற்கொலைக்கு முன்பு தனது சகோதரனுக்கு போன் செய்து, தான் காதலியைக் கொன்றுவிட்டதாகவும், தானும் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சசி கபூர் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இடிபாடுகளுக்கிடையே அந்தப் பெண் ஆடை சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெண்ணின் வாயில் துணி திணிக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, சசி கபூர் தனது காதலியை ஏமாற்றி அழைத்துச் சென்றதாகப் பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், மறுநாளே இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். குறிப்பாக, அந்த இளைஞன் இறப்பதற்கு முன் “தி எண்ட்” (The End) என்ற வாசகத்துடன் ஒரு வீடியோவை டிஜிட்டல் ஆதாரமாக விட்டுச் சென்றுள்ளான். தற்போது இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே பாலியல் வன்கொடுமை குறித்த உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும் என டிஎஸ்பி கமலேஷ் குமார் தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…